மாமாவுடன் மனைவியின் கள்ளக்காதல்! நான்கு மாதங்களில் கணவன் எடுத்த விபரீத முடிவு

மாமாவுடன் மனைவியின் கள்ளக்காதல்! நான்கு மாதங்களில் கணவன் எடுத்த விபரீத முடிவு

செய்தி பிரிவு : ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் மனைவிக்கும் தனது சொந்த மாமாவுக்கும் இடையிலான முறையற்ற உறவால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி ரத்தன்கர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. தற்கொலைக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவில், திருமணமான நான்கே மாதங்களில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் தந்தையான மாமாவுக்கு இடையே காதல் மலர்ந்ததாகவும், இது குறித்து முறையிட்டும் யாரும் செவிசாய்க்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

கூலி வேலை செய்து வந்த அந்த வாலிபர் தனது குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தார். மனைவியின் துரோகத்தால் ஏற்பட்ட மன உளைச்சலே தனது முடிவுக்கு காரணம் என வீடியோவில் தெரிவித்துள்ள அவர், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர கோரியுள்ளார். முன்னதாக தற்செயலான மரணம் என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தற்போது தீவிர குற்றப்பிரிவின் கீழ் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *