சமையல் சிலிண்டர் விலை உயர வாய்ப்பு மத்திய அரசின் மானிய திட்டத்தில் மாற்றம்

இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்களுக்கான மானியம் கணக்கிடும் முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களைச் செய்ய உள்ளது. இதுவரை சவூதி ஒப்பந்த விலையின் அடிப்படையில் மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் விலை மற்றும் போக்குவரத்து செலவுகளையும் இதில் சேர்க்க எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக அமெரிக்க நிறுவனங்களுடன் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நீண்டகால ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
அமெரிக்காவிலிருந்து எரிவாயுவைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு சவூதியை விட நான்கு மடங்கு அதிகமாகும். இந்த கூடுதல் செலவை ஈடுகட்ட மானியம் குறைக்கப்பட்டால், சமையல் சிலிண்டர் விலை உயரும் அபாயம் உள்ளது. டெல்லியில் தற்போது ஒரு சிலிண்டர் விலை 853 ரூபாயாக உள்ளது. இந்த புதிய மாற்றத்தால் சுமார் 33 கோடி நுகர்வோர்கள் மற்றும் உஜ்வாலா திட்டப் பயனாளிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.