பிரியங்கா காந்தியின் மகன் ரெய்ஹான் வதேராவிற்கு ரகசியமாக முடிந்த நிச்சயதார்த்தம்
December 30, 2025

காங்கிரஸ் தலைவி பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேராவின் மகன் ரெய்ஹான் வதேரா, தனது நீண்டகால தோழி அபிபா பெக் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், தற்போது தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ரெய்ஹான் முன்வைத்த திருமண கோரிக்கையை அபிபா ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இரு குடும்பத்தாரும் இவர்களின் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த அபிபா மற்றும் ரெய்ஹானின் இந்த காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரும் முழு சம்மதம் தெரிவித்துள்ளனர். நீண்ட கால உறவு தற்போது திருமண பந்தத்தை நோக்கி நகர்வதால் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் இது பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும், இவர்களது திருமணம் எப்போது நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.