திருமணம் நிச்சயம் செய்த காதலன் பெண்ணின் ஆத்திரத்தால் நேர்ந்த கொடூரம்

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர், தனது காதலனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வணிக வளாகத்தில் ஒன்றாக வேலை செய்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த இளைஞருக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதை அறிந்த காதலி, ஆத்திரமடைந்து அவரை ஒரு வாடகை அறைக்கு வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் நெருக்கமாக இருந்த நேரத்தில், திடீரென மறைத்து வைத்திருந்த பிளேடால் இளைஞரைத் தாக்கியுள்ளார்.
இந்த கொடூரத் தாக்குதலில் இளைஞர் ரத்த வெள்ளத்தில் துடித்த நிலையில், அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதலை நடத்திய பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் இத்தகைய விபரீத முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.