குடலில் தேங்கியுள்ள கழிவுகள் அழுகிவிடாமல் தடுக்க இந்த 4 உணவுகளை உடனே சாப்பிடுங்கள்

தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் முறையற்ற செரிமானம் காரணமாக குடலில் கழிவுகள் தேங்கி அழுகத் தொடங்குகின்றன. இது வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற கடுமையான உபாதைகளை உண்டாக்குகின்றன. குடலில் உள்ள இந்த நச்சுக்கள் வெளியேற்றப்படாவிட்டால், பசியின்மை மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.
குடலை இயற்கையான முறையில் சுத்தப்படுத்த ஆப்பிள், பப்பாளி மற்றும் பெர்ரி போன்ற பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. மேலும் முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி மற்றும் கீரை போன்ற காய்கறிகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன. எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.