வயிற்றில் 35 ஆண்டுகளாக கல்சிறுவன் அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்
December 30, 2025

அல்ஜீரியாவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி மருத்துவர்களையே திகைக்க வைத்துள்ளது. அந்தப் பெண்ணின் வயிற்றில் கடந்த 35 ஆண்டுகளாக ஏழு மாத கரு ஒன்று உயிருடன் இல்லாமல் கல்லாக மாறிய நிலையில் இருந்தது சோதனையில் தெரியவந்தது. மருத்துவ உலகில் ‘லித்தோபீடியன்’ (Lithopedion) என்று அழைக்கப்படும் இந்த நிலை சுமார் 2 கிலோ எடையுள்ள ‘கல் குழந்தையாக’ மாறியுள்ளது.
கருப்பையில் வளராமல் வயிற்றுப் பகுதியில் கரு உருவானதால் இந்த விசித்திர நிலை ஏற்பட்டுள்ளது. போதிய ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் கருவிலேயே குழந்தை உயிரிழந்த நிலையில் அதை வெளியேற்ற வழி இல்லாததால் காலப்போக்கில் அது கல்லைப் போல மாறியது. கடந்த 35 ஆண்டுகளாக அந்தப் பெண் இதன் பாதிப்பை உணராமலேயே வாழ்ந்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.