காதலனுடன் வீடியோ காலில் பேசிய மனைவியைக் கண்டித்த கணவருக்கு நேர்ந்த கதி மாவு உருட்டும் கட்டையால் கணவனின் மூக்கை உடைத்த மனைவி

முசாபர்பூர் மாவட்டம் அகியாப்பூர் பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவர் மீது மனைவி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவி குமார் என்பவர் தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவரை கண்காணித்து வந்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி ஒரு நபருடன் வீடியோ காலில் பேசுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரவி, யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டு செல்போனை பறிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, சமையலறையில் இருந்த மாவு உருட்டும் கட்டையை எடுத்து ரவியை சரமாரியாகத் தாக்கினார்.
இந்த கொடூரத் தாக்குதலில் ரவியின் தலை உடைந்து ரத்தம் கொட்டியதுடன், அவரது மூக்கு எலும்பும் முறிந்தது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரவியை மீட்டு சிகிச்சைக்காக எஸ்கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை என்றும், புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அகியாப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். குடும்ப உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.