காதலியுடன் நெருக்கம் காட்டிய மருமகன் மாமாவே செய்த பகீர் கொலை
December 29, 2025

பீகார் மாநிலம் பாகல்பூரில் தனது சொந்த மருமகனை கூலிப்படை ஏவி கொலை செய்த மாமா சந்தோஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாமாவின் காதலியுடன் மருமகன் அபிஷேக் நெருக்கமாக பழகியதே இந்த கொடூர செயலுக்கு காரணமாக அமைந்துள்ளது. தனது கள்ளத்தொடர்பு வெளியே தெரிந்துவிடும் என்ற ஆத்திரத்தில் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து இந்த கொலையை மாமா அரங்கேற்றியுள்ளார்.
கடந்த டிசம்பர் 24 அன்று கடத்தப்பட்ட அபிஷேக் சுட்டுக் கொல்லப்பட்டு பின்னர் உடல் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டு கங்கையில் வீசப்பட்டது. கொலையை மறைக்க மாமாவே போலீசாருக்கு தகவல் கொடுத்து நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை சுற்றி வளைத்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.