வெள்ளி விலையில் வரலாறு காணாத உச்சம் முதல் முறையாக 2.50 லட்சம் ரூபாயை கடந்தது

வெள்ளி விலையில் வரலாறு காணாத உச்சம் முதல் முறையாக 2.50 லட்சம் ரூபாயை கடந்தது

இந்த ஆண்டின் இறுதியில் வெள்ளி விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டி வரலாறு படைத்துள்ளது. உள்நாட்டு சந்தையில் (MCX) ஒரு கிலோ வெள்ளியின் விலை 14,400 ரூபாய் உயர்ந்து 2,54,174 ரூபாய் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு சுமார் 45 சதவீத லாபத்தை வெள்ளி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையும் அதிகரித்து தற்போது 10 கிராம் 1.40 லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பதற்றம் மற்றும் தொழில் துறை தேவைகள் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சீனா போன்ற நாடுகளின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் வரும் காலங்களில் வெள்ளி விலை ஒரு கிலோ 2.75 லட்சம் ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *