அமெரிக்காவில் நடுவானில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள் ஒரு விமானி பலி

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹாமண்டன் நகராட்சி விமான நிலையத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின. என்ஸ்ட்ரோம் F-28A மற்றும் என்ஸ்ட்ரோம் 280C ஆகிய இரண்டு ரக ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் ஒரு விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான விபத்தின் போது ஹெலிகாப்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தன.
இந்த விபத்து குறித்து ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளன. விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல்கள் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகியவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்தபோது எழுந்த பெரும் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.