காதலித்து கரம் பிடித்த 24 மணிநேரத்தில் விவாகரத்து! மருத்துவர் மற்றும் பொறியாளர் தம்பதியின் அதிரடி முடிவு

காதலித்து கரம் பிடித்த 24 மணிநேரத்தில் விவாகரத்து! மருத்துவர் மற்றும் பொறியாளர் தம்பதியின் அதிரடி முடிவு

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இரண்டு வருடங்களாக காதலித்து வந்த பொறியாளர் மற்றும் பெண் மருத்துவர் தம்பதியினர், திருமணமான ஒரே நாளில் பிரிவதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட கால உறவுக்குப் பிறகு முறைப்படி திருமணம் செய்து கொண்ட இவர்கள், இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே சட்டப்பூர்வமாகப் பிரிய முடிவெடுத்துள்ளனர்.

அவர்களது வழக்கறிஞர் கூறுகையில், இருவருக்கும் இடையே இருந்த தீவிரமான சித்தாந்த வேறுபாடுகளே இந்தப் பிரிவுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார். தங்களுக்குள் ஒத்துப்போகாத கருத்துகளால் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவதை விட, ஆரம்பத்திலேயே பிரிவதே சிறந்தது என அந்த தம்பதி கருதியுள்ளனர். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *