குளிர்காலத்தில் எகிறும் முட்டை விலை அதிரவைக்கும் பின்னணி இதோ
December 29, 2025

நாட்டின் பல்வேறு நகரங்களில் முட்டையின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு முட்டையின் விலை தற்போது 8 ரூபாய் அல்லது அதற்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து உத்திரப்பிரதேச கோழிப்பண்ணை சங்கத் தலைவர் நவாப் அக்பர் அலி கூறுகையில், டிசம்பர் மாதத்தில் முட்டைக்கான தேவை திடீரென அதிகரிப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் தேவையுடன் போக்குவரத்து செலவுகளும் முட்டை விலையை மேலும் உயர்த்தியுள்ளன. நாட்டின் பல நகரங்களுக்கு முட்டைகளை கொண்டு செல்வதற்கான செலவு அதிகரித்துள்ளதால் நுகர்வோர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குளிர்கால தேவை மற்றும் போக்குவரத்து சிக்கல்களே இந்த விலை ஏற்றத்திற்கு பின்னால் உள்ள முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.