அமெரிக்காவின் வரி உயர்வு தடையை முறியடித்து உலக சந்தையில் இந்தியா அபார வெற்றி

அமெரிக்காவின் வரி உயர்வு தடையை முறியடித்து உலக சந்தையில் இந்தியா அபார வெற்றி

2025 ஆம் ஆண்டில் இந்திய ஏற்றுமதிக்கு அமெரிக்கா 50 சதவீத கூடுதல் வரி விதித்த போதிலும், இந்தியா தனது வர்த்தக வியூகத்தை மாற்றி வெற்றி கண்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்காமல் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் புதிய சந்தைகளை உருவாக்கினர். உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் இந்த சமயோசித நடவடிக்கை வர்த்தக பாதிப்பைக் கணிசமாகக் குறைத்துள்ளது.

வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தகவல்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 825.25 பில்லியன் டாலர் என்ற வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 6 சதவீத வளர்ச்சியாகும். பிரிட்டன் மற்றும் ஓமனுடன் மேற்கொள்ளப்படவுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் 2026 ஆம் ஆண்டில் இந்திய ஏற்றுமதி மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *