சொந்த அக்காவின் மகனை மணந்த மாமி, கணவனுக்கு திருமண புகைப்படத்தை அனுப்பி அதிர்ச்சி கொடுத்த சம்பவம்

சொந்த அக்காவின் மகனை மணந்த மாமி, கணவனுக்கு திருமண புகைப்படத்தை அனுப்பி அதிர்ச்சி கொடுத்த சம்பவம்

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் தனது கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு, சொந்த உறவுமுறை கொண்ட மருமகனுடன் பெண் ஒருவர் ஓட்டம் பிடித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூனம் குமாரி என்ற அந்த பெண், தனது கணவர் சிவத்தின் உறவினரான அங்கித் குமாருடன் நீண்ட நாட்களாக பழகி வந்துள்ளார். திடீரென மாயமான அவர், தனது கணவருக்கு கோவிலில் வைத்து அங்கித்தை திருமணம் செய்த புகைப்படத்தை அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தகவல் அறிந்த கணவர் சிவம், தனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து கண்ணீர் மல்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மனைவியின் இந்த செயலால் நிலைகுலைந்து போன அவர், குழந்தைகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அமர்பூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த பெண் மற்றும் குழந்தைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *