வெறும் 312 ரூபாய்க்காக 41 ஆண்டுகள் நீதிமன்றத்தை அலைந்த மூதாட்டி 11 நீதிபதிகள் கடந்தும் நீண்ட போராட்டத்திற்கு பின் கிடைத்த நீதி

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கங்கா தேவி என்ற பெண்மணி, வெறும் 312 ரூபாய் நீதிமன்றக் கட்டணத்தை செலுத்தியும், நிர்வாகக் குளறுபடியால் அந்த ரசீது காணாமல் போனதால் 41 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தை சந்தித்துள்ளார். 1975-ல் தொடங்கிய இந்த சொத்து வழக்கில், அவர் ஏற்கனவே கட்டணம் செலுத்திய போதிலும், ரசீது இல்லாத காரணத்தால் மீண்டும் பணம் கட்ட மறுத்து நீதிக்காக நீதிமன்றப் படிகளையே நம்பி காத்திருந்தார்.
நீண்ட 41 ஆண்டுகளுக்குப் பிறகு, மிர்சாபூர் சிவில் நீதிபதி இந்த வழக்கை ஆய்வு செய்தபோது, கங்கா தேவி கட்டணம் செலுத்தியது உறுதி செய்யப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் 11 நீதிபதிகள் இந்த வழக்கை கையாண்டும் தவறு கண்டுபிடிக்கப்படவில்லை. இறுதியாக நீதிமன்றம் தனது தவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பளித்த போது, அந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்க கங்கா தேவியின் உறவினர்கள் யாரும் அங்கு இல்லாதது சோகத்தை ஏற்படுத்தியது.