கணவன் மீதான கோபத்தில் 4 லட்ச ரூபாயை மென்று விழுங்கிய மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

கணவன் மீதான கோபத்தில் 4 லட்ச ரூபாயை மென்று விழுங்கிய மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

கொலம்பியாவில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்தது. இருவரும் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் அது தொடர்பான தகராறில் கோபமடைந்த மனைவி தான் சேர்த்து வைத்திருந்த 7000 டாலர் அதாவது சுமார் 4 லட்சம் ரூபாய் பணத்தை மென்று விழுங்கினார். கோபம் ஒருவரின் விவேகத்தை எப்படி அழிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

பணத்தை விழுங்கியதால் அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த பணத்தை மீட்டனர். தம்பதியினரிடையே ஏற்படும் மோதல்கள் இதுபோன்ற ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *