சமூக வலைதளங்களில் மற்ற பெண்களுக்கு லைக் போட்டால் விவாகரத்து உறுதி

சமூக வலைதளங்களில் மற்ற பெண்களுக்கு லைக் போட்டால் விவாகரத்து உறுதி

சமூக வலைதளங்களில் மற்ற பெண்களின் புகைப்படங்களுக்குத் தொடர்ந்து ‘லைக்’ போடுவதும், கருத்து தெரிவிப்பதும் விவாகரத்து கோருவதற்கான செல்லுபடியாகும் காரணம் என்று துருக்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தனது கணவர் சமூக வலைதளங்களில் மற்ற பெண்களுடன் எல்லை மீறி பழகுவதாகவும், அது திருமண உறவின் நம்பிக்கையை சிதைப்பதாகவும் கூறி ஒரு பெண் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கணவரின் இத்தகைய செயல் திருமண விசுவாசத்தை மீறுவதாக நீதிமன்றம் கருதுகிறது.

இந்த வழக்கில் கணவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம், மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் மற்றும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. டிஜிட்டல் திரைப் பதிவுகள் (Screenshots) இனி விவாகரத்து வழக்குகளில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்கால டிஜிட்டல் உலகில் சமூக வலைதள பயன்பாடு தம்பதியினரிடையே எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்த தீர்ப்பு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *