ஒரு சிகரெட் விலை 72 ரூபாயாக உயர்வு புதிய சட்டத்தால் அதிரப்போகும் புகைப்பிடிப்பவர்கள்

மத்திய கலால் வரி திருத்த மசோதா 2025 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து புகையிலை பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர உள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி சிகரெட் மீதான வரி பலமடங்கு அதிகரிக்கப்படுவதால் தற்போது 18 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை சுமார் 72 ரூபாயாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி தாக்கல் செய்த இந்த மசோதா சிகார் மற்றும் ஊக்கா புகையிலை மீதான வரியையும் கணிசமாக உயர்த்துகிறது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தி இளைஞர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதே இந்த வரி உயர்வின் முக்கிய நோக்கமாகும். சமூக வலைதளங்களில் இது குறித்து பெரும் விவாதம் எழுந்துள்ள நிலையில் விலையேற்றத்தால் பலர் புகையிலை பழக்கத்தை கைவிட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும் இந்த விலை உயர்வு கள்ளச்சந்தை மற்றும் போலி சிகரெட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.