அமெரிக்காவை விட இந்த நாடு தான் அதிக இந்தியர்களை வெளியேற்றியுள்ளது தெரியுமா

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளால், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் பலர் தாயகம் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகால புள்ளிவிவரங்கள் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளன. இந்தியர்களை வெளியேற்றிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்தியர்களை அதிகளவில் திருப்பி அனுப்பிய நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா முதலிடம் வகிக்கிறது. விசா விதிமீறல்கள் மற்றும் பல்வேறு சட்டக் காரணங்களுக்காக சவூதி அரேபியா தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகப்படியான இந்தியர்களை வெளியேற்றியுள்ளது. தற்போதைய சூழலில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் பேசுபொருளாக இருந்தாலும், புள்ளிவிவர ரீதியாக சவூதி அரேபியாவே இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளது.