ஆரோக்கியமாக இருக்க ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் தெரியுமா

உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் வயதுக்கேற்ப அதன் தேவை மாறுபடுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு முட்டையும், 10 முதல் 15 வயதுடையவர்களுக்கு இரண்டு முட்டைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. அதேபோல், 15 முதல் 20 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முட்டைகளையும், 20 முதல் 30 வயதுடையவர்கள் இரண்டு முதல் மூன்று முட்டைகளையும் தாராளமாக உண்ணலாம்.
இருப்பினும், உடல்நலப் பாதிப்புகள் உள்ளவர்கள் முட்டை சாப்பிடுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைக்கருவை மட்டும் உண்ணுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சரியான அளவில் முட்டை உட்கொள்வது ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி உடலை வலிமையாக்க உதவுகிறது.