3 நிமிடம் மரணித்து பின் உயிர் பிழைத்த நாத்திகப் பெண்: மரணத்திற்குப் பிந்தைய உலகம் குறித்து அதிரவைக்கும் உண்மைகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ட்ரிசியா பார்கர் என்ற பெண்ணின் வாழ்க்கையில் நடந்த அதிசயம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 21 வயது வரை கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகராக இருந்த ட்ரிசியா, ஒரு கோர விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையின் போது அவரது இதயம் துடிப்பதை நிறுத்தியது, இதனால் மருத்துவர்கள் அவரை மூன்று நிமிடங்கள் ‘கிளினிக்கல் டெத்’ அதாவது உயிரிழந்ததாக அறிவித்தனர். அந்த மூன்று நிமிடங்களில் அவர் கண்ட காட்சிகள் அனைவரையும் உறைய வைத்துள்ளது.
தன்னுடைய உடலில் இருந்து ஆன்மா பிரிந்து செல்வதை உணர்ந்ததாகக் கூறும் ட்ரிசியா, அங்கு ஒரு ஒளிமயமான மனிதரையும் தனது மறைந்த முன்னோர்களையும் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும், தான் மயக்கத்தில் இருந்தபோது மருத்துவமனை காத்திருப்பு அறையில் தனது உறவினர்கள் செய்த செயல்களை அவர் துல்லியமாக விவரித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிகழ்விற்குப் பிறகு கடவுள் நம்பிக்கையற்றவராக இருந்த அவர், தனது வழக்கறிஞர் கனவைக் கைவிட்டு இறைவனின் கட்டளைப்படி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.