திருமணம் செய்யக்கோரி காதலியின் புகுந்த வீட்டிற்கு வந்த காதலன் ஆனால் ஏற்க மறுத்த பெண்
December 31, 2025

ஜல்பைகுரி மாவட்டம் கடோங் சத்வெண்டி கிராமத்தில், ஒரு திருமணமான பெண்ணின் வீட்டிற்கு வந்த அவரது காதலன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். கடந்த ஏழு ஆண்டுகளாக ரகசியமாகத் தொடர்ந்த இந்த உறவில், இப்போது திருமணம் செய்ய வேண்டும் என்ற காதலனின் பிடிவாதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அந்தப் பெண் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ விரும்புவதாகவும், காதலனை வேண்டாம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தால் கிராமத்தில் பெரும் கூட்டம் கூடிய நிலையில், அந்தப் பெண்ணின் கணவர் தனது மனைவியை மன்னிக்கத் தயார் என்று கூறினார். தகவலறிந்து வந்த துப்குரி போலீசார், அசம்பாவிதங்களைத் தவிர்க்க காதலன் மற்றும் அந்தப் பெண்ணை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.