ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே காலக்கெடு உடனே முடிக்காவிட்டால் சிக்கல் நிச்சயம்

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. அவ்வாறு செய்யத் தவறினால் ஜனவரி 1, 2026 முதல் உங்கள் பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது. இதனால் வருமான வரித் தாக்கல் (ITR) செய்ய முடியாது மற்றும் வரி ரீஃபண்ட் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். மேலும் வங்கி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான நிதிச் சேவைகள் முடக்கப்பட வாய்ப்புள்ளது.
பான்-ஆதார் இணைக்கப்படாத பட்சத்தில் அதிகப்படியான டிடிஎஸ் (TDS) பிடிக்கப்படும் மற்றும் 1,000 ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் பான், ஆதார் மற்றும் மொபைல் எண்களைக் கொண்டு எளிதாக ஆன்லைனில் இணைப்பைச் சரிபார்க்கலாம். ஆதார் விவரங்களை முன்கூட்டியே புதுப்பிப்பதன் மூலம் கடைசி நேர நெருக்கடியையும் அபராதத்தையும் தவிர்க்கலாம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவுறுத்தியுள்ளது.