எல்லைகளே இல்லாத ஷாப்பிங் உலகின் மிக சக்திவாய்ந்த இந்த கிரெடிட் கார்டு உங்களிடம் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம்

எல்லைகளே இல்லாத ஷாப்பிங் உலகின் மிக சக்திவாய்ந்த இந்த கிரெடிட் கார்டு உங்களிடம் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம்

உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் விலையுயர்ந்த கிரெடிட் கார்டாக ‘அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் செஞ்சுரியன் கார்டு’ கருதப்படுகிறது. ‘அமெக்ஸ் பிளாக் கார்டு’ என்று அழைக்கப்படும் இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், இதில் செலவு செய்ய எந்தவிதமான வரம்பும் (Limit) கிடையாது. இந்த கார்டைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் ஷாப்பிங் செய்வது முதல் தனிப்பட்ட விமானங்கள் மற்றும் சொகுசு வீடுகள் வரை எதை வேண்டுமானாலும் வாங்க முடியும். ஆனால், இது அனைவருக்கும் கிடைப்பதில்லை; தகுதியான கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே நிறுவனத்தால் அழைப்பு விடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் குறைவானவர்களே இந்த கார்டை வைத்துள்ளனர், இந்தியாவில் இதன் எண்ணிக்கை மிகக் குறைவு. இதைப்பரிந்துரைக்கப்பட வேண்டுமென்றால், வாடிக்கையாளர் ஆண்டுக்குக் பல கோடி ரூபாய் செலவு செய்யும் திறன் மற்றும் சிறந்த கிரெடிட் ஸ்கோர் பெற்றிருக்க வேண்டும். 1999 இல் அறிமுகமான இந்த கார்டு, இன்று உலகின் மிக உயரிய அந்தஸ்தின் அடையாளமாகத் திகழ்கிறது. இதன் மூலம் நிதி ரீதியான எல்லையற்ற சுதந்திரத்தை அதன் பயனர்கள் அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *