சமையலறையில் தொடங்கிய வெங்காயப் பிரச்சனை இருபத்தி மூன்று கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்த வினோதம்

சமையலறையில் தொடங்கிய வெங்காயப் பிரச்சனை இருபத்தி மூன்று கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்த வினோதம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவது தொடர்பான தகராறால் 23 ஆண்டுகால திருமண உறவு முறிவுக்கு வந்துள்ளது. கணவர் குடும்பத்தினர் வெங்காயம் சேர்த்து உணவருந்த, மனைவி ‘சுவாமிநாராயண்’ மதத்தைப் பின்பற்றுவதால் அவற்றைத் தவிர்த்துள்ளார். 2002-ல் திருமணம் ஆனது முதலே இந்த உணவுப் பழக்கம் தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி மாமியார் தனித்தனியாக சமைத்தும் இந்த மனக்கசப்பு தீரவில்லை.

குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து மனைவி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணையில் அவர் விவாகரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஜீவனாம்சம் பெறுவதிலேயே ஆர்வம் காட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். மத நம்பிக்கைகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட முரண்பாடே இந்த நீண்டகால பந்தம் பிரியக் காரணமாக அமைந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *