33 வயதில் 13வது முறையாக கர்ப்பமான பெண் ஒரு டஜன் குழந்தைகள் பெற்றெடுக்க இதுவே காரணம்

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவைச் சேர்ந்த 33 வயதான பிரிட்னி சர்ச் தற்போது 13வது முறையாக கர்ப்பமாக உள்ளார். தனது 16வது வயதில் முதல் குழந்தையைப் பெற்றெடுத்த இவர், ஒரு பெரிய குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குழந்தையைத் திட்டமிட்டுப் பெற்றெடுத்துள்ளார். இவரது 12 குழந்தைகளுக்கும் ‘சி’ என்ற ஆங்கில எழுத்திலேயே பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தைகளின் விருப்பத்திற்காகவே அடுத்தடுத்த பிரசவங்களுக்குச் சம்மதித்ததாக பிரிட்னி கூறுகிறார்.
இவ்வளவு பெரிய குடும்பத்தை நிர்வகிப்பது சவாலானது, குறிப்பாக இவர்களது மாத பால் செலவு மட்டுமே சுமார் 16 ஆயிரம் ரூபாய் ஆகிறது. ஒரு தேவாலய போதகரான இவரது கணவருடன் சேர்ந்து, 12 ஏக்கர் பண்ணை வீட்டில் 140 விலங்குகளுடன் இவர்கள் வசித்து வருகின்றனர். குழந்தைகள் அனைவருக்கும் வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் தனது குடும்பப் படங்களைப் பகிர்ந்து வரும் பிரிட்னி, அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்காகப் பலமுறை விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.