இரயிலில் ஏற்பட்ட நட்பு திருமண ஆசையில் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண் வாரணாசியில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி சம்பவம்

செய்தி பிரிவு : உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பெண்ணொருவர் திருமண ஆசை காட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரி வீட்டிற்குச் செல்லும் வழியில் இரயிலில் அறிமுகமான அல்தாப் என்பவருடன் அந்தப் பெண்ணிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அல்தாப், அவரை ஃபரூகாபாத் மற்றும் மெயின்புரி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று இறுதியில் ஹிருதேஷ் என்பவருக்கு விற்க முயன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்ய நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்து தப்பித்த அவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அல்தாப் தன்னைக் கைமாற்றுவதற்காக ஒரு லட்ச ரூபாய் வாங்கியதை அறிந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தலைமறைவாக உள்ள அல்தாப், ராம்நிவாஸ் மற்றும் ஹிருதேஷ் ஆகிய மூவரைப் பிடிக்கக் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.