திருமண சடங்குகளை செய்த புரோகிதருடன் ஓட்டம் பிடித்த மணப்பெண் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள நகைகளும் மாயம்

திருமண சடங்குகளை செய்த புரோகிதருடன் ஓட்டம் பிடித்த மணப்பெண் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள நகைகளும் மாயம்

மத்திய பிரதேச மாநிலம் சிரோஞ்ச் பகுதியில் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த மே 7-ஆம் தேதி ஒரு இளம் பெண்ணிற்கு திருமணம் நடந்த நிலையில், அந்தத் திருமணத்தை நடத்தி வைத்த வினோத் மகராஜ் என்ற புரோகிதருடனேயே அந்தப் பெண் தற்போது ஓட்டம் பிடித்துள்ளார். திருமணத்திற்குப் பின் தனது தாய் வீட்டிற்கு வந்த அந்தப் பெண், அங்கு ஒரு திருமணத்தை நடத்த வந்த புரோகிதருடன் மாயமானார். அந்தப் புரோகிதருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் விசாரணையில் அந்தப் பெண்ணிற்கும் புரோகிதருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதல் இருந்தது தெரியவந்தது. வீட்டை விட்டு வெளியேறும்போது அந்தப் பெண் தனது புகுந்த வீட்டிலிருந்து கொண்டு வந்த 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் எடுத்துச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாயமான இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *