இரவில் செய்யும் இந்த 4 தவறுகள் மலச்சிக்கலை உண்டாக்கும் ஆரோக்கியமான செரிமானத்திற்கு இதோ வழிகள்

தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் இன்று பலரும் செரிமானப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இரவில் தூங்கும் முன் நாம் செய்யும் சில தவறுகள் மலச்சிக்கலைத் தீவிரப்படுத்துகின்றன. காரமான உணவுகளை உண்பது மற்றும் சாப்பிட்ட உடனே தூங்குவது செரிமானப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தி, குடல் இயக்கத்தைத் தாமதப்படுத்துகிறது. இது உணவு செரிக்காமல் குடலில் தங்கி உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது.
இரவில் டீ, காபி அல்லது மது அருந்துவது உடலை நீரிழப்புக்கு உள்ளாக்குகிறது, இதனால் மலம் கடினமாகி வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் தூங்கும் முன் மன அழுத்தம் கொள்வது மற்றும் மொபைல் திரையைப் பார்ப்பது செரிமான மண்டலத்தைப் பாதிக்கிறது. எனவே இரவு உணவிற்குப் பிறகு சிறிது தூரம் நடப்பது மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மலமிளக்கப் பிரச்சனைகளைத் தவிர்த்து குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.