சீன ராக்கெட் லாஞ்சர் வெடித்து சிதறியதில் 8 வீரர்கள் பலி தரமற்ற ஆயுதங்களால் சீனாவுக்கு அவமானம்

தாய்லாந்துடனான எல்லை மோதலில் சீன தயாரிப்பு ஆயுதங்களைப் பயன்படுத்திய கம்போடியாவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சீனாவால் தயாரிக்கப்பட்ட எம்270 மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாய்லாந்து மீது தாக்குதல் நடத்த முயன்றபோது, ஒரு ராக்கெட் ஏவுதளத்திலேயே சிக்கி வெடித்தது. இந்த கோர விபத்தில் 8 கம்போடிய வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். சீனாவின் அதிநவீன தொழில்நுட்பம் என்று கூறப்பட்ட இந்த ஆயுதம் போர்க்களத்தில் தோல்வியடைந்தது அந்நாட்டுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் பயன்படுத்திய சீன ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இலக்கை அடையாமல் செயலிழந்த நிலையில், தற்போது கம்போடியாவிலும் இதே போன்ற தோல்வி நிகழ்ந்துள்ளது. தரமற்ற சீன ஆயுதங்களை நம்பி போரில் இறங்குவது சொந்த வீரர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சீனாவின் ராணுவ தளவாடங்களின் தரம் குறித்து சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.