சுப்மன் கில் நீக்கம்: கேள்வி கேட்ட செய்தியாளர்கள்! மௌனம் காத்து நகர்ந்த கௌதம் கம்பீர்!
December 21, 2025

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் சேர்க்கப்படாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்க தொடரில் அவரது மோசமான ஃபார்ம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார். இந்நிலையில், இது குறித்து டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
எந்தக் கருத்தும் கூறாமல் கம்பீர் தனது காரில் ஏறிச் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கம்பீரின் இந்தச் செயல் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது; சிலர் இதை வெளிப்படைத்தன்மை அற்றது என்றும், சிலர் இதை அவரது தனித்துவமான பாணி என்றும் கூறி வருகின்றனர்