எப்ஸ்டீன் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்! டிரம்பின் புகைப்படங்கள் அடங்கிய 16 கோப்புகள் மாயம்
December 21, 2025

அமெரிக்காவில் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்ட நிலையில், நீதித்துறையின் இணையதளத்திலிருந்து 16 முக்கிய கோப்புகள் திடீரென மாயமாகியுள்ளன. இதில் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் எப்ஸ்டீனுடன் இருக்கும் அரிய புகைப்படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோப்புகள் நீக்கப்பட்டது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது திட்டமிட்டு மறைக்கப்பட்டதா அல்லது தொழில்நுட்ப கோளாறா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. எப்ஸ்டீன் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இந்த மர்மமான மறைவு பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.