மோடியின் பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது சோகம்! நதியாவில் ரயில் மோதி 4 பேர் பலி
December 20, 2025

நதியா மாவட்டத்தின் கிருஷ்ணாநகர்-ரணாகாட் ரயில் பிரிவில் சனிக்கிழமை அதிகாலை ரயில் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த இவர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தனர். அதிகாலையில் தண்டவாளம் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது இந்த கோர விபத்து நிகழ்ந்தது.
மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றொருவர் சக்திநகர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு முர்ஷிதாபாத்திலிருந்து பேருந்தில் புறப்பட்ட இவர்கள், அதிகாலை தஹெர்பூர் வந்தடைந்த நிலையில் இந்த விபத்து நேரிட்டது.