தூங்கும் முன் மொபைல் பார்க்கும் பழக்கம் உள்ளதா உங்களுக்கு காத்திருக்கிறது மிகப்பெரிய ஆரோக்கிய சீர்கேடு

தூங்கும் முன் மொபைல் பார்க்கும் பழக்கம் உள்ளதா உங்களுக்கு காத்திருக்கிறது மிகப்பெரிய ஆரோக்கிய சீர்கேடு

படுக்கையில் படுத்துக்கொண்டு நீண்ட நேரம் சமூக வலைதள ரீல்ஸ்களை பார்ப்பது உங்கள் உடலுக்கு மெதுவான விஷமாக மாறக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பழக்கத்தினால் கழுத்து மற்றும் முதுகெலும்பில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டு ‘டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்’ பாதிப்பு உண்டாகிறது. மேலும் மொபைல் திரையில் இருந்து வெளிவரும் நீல ஒளி தூக்கத்தை தூண்டும் மெலடோனின் ஹார்மோனை பாதித்து கடுமையான தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.

தொடர்ச்சியாக ரீல்ஸ் பார்ப்பது உடல்நலனை மட்டுமின்றி மனநலனையும் பாதிக்கிறது. இது மூளையை அதிகப்படியான செயல்பாட்டில் வைத்திருப்பதால் கவனச்சிதறல் மற்றும் மன அழுத்தம் போன்ற சிக்கல்கள் உருவாகின்றன. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தூங்குவதற்கு குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்பே மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *