மாற்று மதத்தினர் மீது காதல் திருமணம் தந்தை சொத்தில் பங்கில்லை என்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

மாற்று மதத்தினர் மீது காதல் திருமணம் தந்தை சொத்தில் பங்கில்லை என்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

வேற்று சமூகத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்த காரணத்திற்காக மகளைத் தனது உயிலிலிருந்து தந்தை நீக்கிய வழக்கில், உச்ச நீதிமன்றம் தந்தையின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளது. தந்தை என்.எஸ். ஸ்ரீதரன் தனது சொத்தில் மகளுக்குப் பங்கு தர மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு நபர் தனது சுயார்ஜித சொத்துக்களை யாருக்கு வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கும் முழு உரிமை படைத்தவர் என்று கூறினர். இதன் மூலம் உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

மனுதாரர் ஷைலா ஜோசப் தனது தந்தையின் சொத்தில் சமபங்கு கோரியிருந்த நிலையில், உயிலில் சமத்துவ உரிமையைப் பார்க்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. உயில் எழுதியவரின் இறுதி விருப்பமே மேலானது என்றும், அதில் நீதிமன்றம் தனது கருத்துக்களை திணிக்க முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மற்ற உடன்பிறப்புகளுக்குச் சொத்து வழங்கப்பட்ட நிலையில், ஷைலாவிற்கு அதில் எந்த உரிமையும் இல்லை என்று கூறி அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *