40 முறைக்கும் மேல் ஹோட்டல் சந்திப்புகள் மற்றும் பரஸ்பர சம்மதம் இருந்தும் ஏன் அந்த இளைஞர் விடுவிக்கப்பட்டார்

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நீதிமன்றம் பரபரப்பான பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார். ஆனால் மூன்று ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு இருவருக்கும் இடையே இருந்த உறவு பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
விசாரணையில் அவர்கள் இருவரும் பல்வேறு ஹோட்டல்களில் 40 முதல் 50 முறை சந்தித்துக் கொண்டது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் புகாரளித்த பெண் விவாகரத்து பெற்றவர் என்பதும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் இருவருக்கும் இடையிலான உறவு விருப்பத்தின் பெயரில் அமைந்ததாலும் அந்த இளைஞரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.