சவுதி அரேபியாவில் மூன்றரை கோடி மக்கள் இருந்தாலும் ஒரே ஒரு மதுக்கடை மட்டுமே இருக்கும் வினோதம்
December 19, 2025

சுமார் 3.5 கோடி மக்கள் தொகை கொண்ட சவுதி அரேபியாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் ரியாத்தில் ஒரே ஒரு மதுக்கடை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கடை அனைவருக்கும் பொதுவானது அல்ல. இது பிரத்யேகமாக முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதர்கள் மற்றும் குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்ட முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மட்டுமே செயல்படுகிறது, பொதுமக்களுக்கு இங்கு அனுமதி இல்லை.
இங்கு மது வாங்குவதற்கான விதிமுறைகள் மிகவும் கடுமையானவை. ஒருவர் ஆண்டுக்கு குறைந்தது 13,300 அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்க வேண்டும் மற்றும் அதற்கான வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்த பின்னரே கடைக்குள் நுழைய முடியும். ஒரு நபருக்கு மாதம் இவ்வளவு தான் மது வழங்கப்பட வேண்டும் என்ற கட்டுபாடும் அங்கு அமலில் உள்ளது.