கர்ப்பமாக்கினால் கோடிக்கணக்கில் பணம்! மோசடி கும்பலிடம் சிக்கி வாலிபர் தற்கொலை

கர்ப்பமாக்கினால் கோடிக்கணக்கில் பணம்! மோசடி கும்பலிடம் சிக்கி வாலிபர் தற்கொலை

பெண் ஒருவரை கர்ப்பமாக்கினால் பெரும் தொகை தருவதாகக் கூறி வாட்ஸ்அப் அழைப்பு மூலம் சத்தீஸ்கரைச் சேர்ந்த காமேஷ்வர் நிர்மல்கர் என்ற வாலிபரை சைபர் மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. இந்த ஆசை வார்த்தைகளை நம்பிய வாலிபரை கட்டாயப்படுத்தி பல்வேறு வங்கிக் கணக்குகளைத் தொடங்கச் செய்த மோசடி கும்பல், அதன் மூலம் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டு வந்தது.

தான் ஒரு பெரிய குற்றச்சதியில் சிக்கிக் கொண்டதை உணர்ந்த காமேஷ்வர், போலீஸ் நடவடிக்கை மற்றும் அவமானத்திற்கு பயந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு அருகில் இருந்த தற்கொலை கடிதம் மூலம் இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் ஆன்லைன் மோசடிகள் குறித்து மக்களிடையே பெரும் அச்சத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *