எம்.பி.ஏ பட்டதாரிகளின் ஏ.ஐ கஞ்சா தோட்டம்! பிளாட்டில் ஹை-டெக் முறையில் போதைப்பொருள் வளர்ப்பு: அதிரடி கைது
December 18, 2025

புனே மற்றும் மும்பையில் செயல்பட்டு வந்த அதிநவீன போதைப்பொருள் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். எம்.பி.ஏ பட்டதாரிகளான சுமித் தேத்வால் மற்றும் அக்சய் மெஹர் ஆகியோர் தங்களது வாடகை பிளாட்டை ஒரு நவீன ஆய்வகமாக மாற்றியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஹைட்ரோபோனிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மண்ணின்றி தண்ணீரில் உயர் ரக ‘OG-Kush’ கஞ்சாவை இவர்கள் வளர்த்து வந்துள்ளனர்.
இந்த கும்பல் டார்க் வெப் மூலம் தாய்லாந்திலிருந்து விதைகளை இறக்குமதி செய்துள்ளது. போலீசில் சிக்காமல் இருக்க கிரிப்டோகரன்சி மூலம் பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். இந்த சோதனையில் மும்பை மற்றும் புனே பகுதிகளில் இருந்து சுமார் 3.25 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.