மோடி அரசு நினைத்திருந்தால் எங்களை மண்டியிட வைத்திருக்கலாம், ஆனால் அவர்கள் வாரி வழங்கியுள்ளனர்: உமர் அப்துல்லா

மோடி அரசு நினைத்திருந்தால் எங்களை மண்டியிட வைத்திருக்கலாம், ஆனால் அவர்கள் வாரி வழங்கியுள்ளனர்: உமர் அப்துல்லா

பயங்கரவாதம் மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கான சூழல் இல்லாததால், பாகிஸ்தானுடன் உறவை சீராக்குவது தற்போது சாத்தியமற்றது என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். அமைதியை நிலைநாட்டும் முழு பொறுப்பும் பாகிஸ்தானிடமே உள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாநில அந்தஸ்து மற்றும் அதிகார வரம்புகள் குறித்து அதிருப்தி இருந்தாலும், மத்திய அரசின் நிதியுதவியை அவர் பாராட்டியுள்ளார். மத்திய அரசு நினைத்திருந்தால் நிர்வாக ரீதியாக நெருக்கடி கொடுத்திருக்க முடியும், ஆனால் அவர்கள் பட்ஜெட்டை விட கூடுதல் நிதி வழங்கி ஆதரவளித்துள்ளனர் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *