மோடி அரசு நினைத்திருந்தால் எங்களை முழங்காலிடச் செய்திருக்கலாம் ஓமர் அப்துல்லா நெகிழ்ச்சி
December 18, 2025

மத்திய அரசு நினைத்திருந்தால் ஜம்மு-காஷ்மீரை நிதி ரீதியாக முடக்கியிருக்கலாம் என்று முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஆனால், பழிவாங்கும் அரசியலில் ஈடுபடாமல், மோடி அரசு நிர்ணயிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை விட கூடுதல் நிதி வழங்கி தங்களுக்குப் பெரும் ஆதரவை அளித்துள்ளதாக அவர் கூறினார்.
பாகிஸ்தானுடனான உறவு குறித்துப் பேசிய அவர், தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்றார். தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மத்தியில் சுமூகமான உறவை எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்றும், அமைதியான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானிடமே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.