மகாராஷ்டிர விளையாட்டு அமைச்சருக்கு இரண்டு ஆண்டு சிறை மற்றும் பிடிவாரண்ட்

மகாராஷ்டிர விளையாட்டு அமைச்சருக்கு இரண்டு ஆண்டு சிறை மற்றும் பிடிவாரண்ட்

மகாராஷ்டிர விளையாட்டுத் துறை அமைச்சர் மணிக்ராவ் சிவாஜிராவ் கோகாட்டேவுக்கு வீட்டுவசதித் திட்ட மோசடி வழக்கில் நாசிக் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முதலமைச்சரின் வீட்டுவசதித் திட்டத்தில் முறைகேடாகப் பல அடுக்குமாடி குடியிருப்புகளைப் பெற்றதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விவரம் வெளியானதைத் தொடர்ந்து அமைச்சருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட இந்த நீதிமன்றத் தீர்ப்பு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் வழக்கில் செல்வாக்குமிக்க அமைச்சர் ஒருவர் தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *