நீண்ட இடைவேளைக்கு பிறகு திரைப்பயணம் குறித்து மனம் திறந்த நடிகை மாதுரி தீட்சித்

நீண்ட இடைவேளைக்கு பிறகு திரைப்பயணம் குறித்து மனம் திறந்த நடிகை மாதுரி தீட்சித்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான மாதுரி தீட்சித், ‘மிசஸ் தேஷ்பாண்டே’ என்ற திரில்லர் தொடரின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். தனது இடைவேளை குறித்துப் பேசிய அவர், எண்ணிக்கையை விட தரமான கதைகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்தார். ஒரு கலைஞராக தனக்கு மனநிறைவையும் சவாலையும் தரும் கதாபாத்திரங்களை மட்டுமே தற்போது தேர்வு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் நாகேஷ் குகுனூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடரில், மாதுரி தீட்சித் ஒரு தொடர் கொலையாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு சிறந்த படைப்பிற்கு வலுவான திரைக்கதை அவசியம் என்று அவர் கூறியுள்ளார். இந்த விறுவிறுப்பான தொடர் டிசம்பர் 19 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *