மகாபாரதம் எழுதப்பட்ட அந்த மர்ம குகை இன்றும் எங்கே இருக்கிறது தெரியுமா
December 17, 2025

உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் அமைந்துள்ள ‘வியாஸ் குகை’ மகாபாரதம் உருவான இடமாக கருதப்படுகிறது. புராணங்களின்படி, முனிவர் வேத வியாசர் இங்கு ஸ்லோகங்களைச் சொல்ல, விநாயகப் பெருமான் அவற்றை எழுதினார். பத்ரிநாத் தாமில் இருந்து சுமார் 5.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த குகை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.
இந்தியா-திபெத் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மனா கிராமம் இந்தியாவின் முதல் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. பனி மூடிய மலைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த புனித தளம், இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது. இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குகையை தரிசித்து மகாபாரத காலத்தின் தெய்வீக ஆற்றலை உணர்கின்றனர்.