மனைவிக்கு தெரியாமல் ৫২০ பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவன்
December 17, 2025

ஜப்பானைச் சேர்ந்த நேமு குசானோ என்ற பெண், தனது கணவருக்கு ৫২০ பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அமைதியான சுபாவம் கொண்டவர் என்று நம்பி திருமணம் செய்தவருக்கு பின்னால் இருந்த இந்த கள்ளத்தொடர்பு வலை, அவர் குழந்தையின் பிறப்புக்கு பின்பே தெரியவந்தது. கணவனின் செல்போன் மற்றும் பையில் இருந்த ஆதாரங்கள் இந்த உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.
மருத்துவ பரிசோதனையில் அந்த நபருக்கு பள்ளி பருவத்திலிருந்தே ஒருவித மனநல பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. தற்போது கணவரை பிரிந்து வாழும் குசானோ, தனது இந்த வலிகரமான அனுபவத்தை ஒரு புத்தகம் மற்றும் சித்திரக்கதை மூலம் உலகிற்கு பகிர்ந்துள்ளார்.