மனைவியின் ஸ்கூட்டரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கள்ளக்காதலை கண்டுபிடித்த கணவன்
December 17, 2025

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 15 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் மனைவியின் கள்ளக்காதலை கணவர் ரவி குலாட்டி ஆதாரத்துடன் பிடித்துள்ளார். மனைவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கணவர், அவரது ஸ்கூட்டரில் ரகசியமாக ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி கண்காணித்து வந்த நிலையில், ஹோட்டல் ஒன்றில் மற்றொரு நபருடன் இருந்த மனைவியை கைகலப்புடன் பிடித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டே இது போன்ற புகாரில் சிக்கிய மனைவியை குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ரவி மன்னித்து ஏற்றிருந்தார். தற்போது மீண்டும் அதே தவறை செய்துள்ளதால், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.