ஓய்வூதியத்தில் புதிய அதிரடி 1.22 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் யுபிஎஸ் திட்டத்தை தேர்வு செய்தனர்
December 17, 2025

மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) நவம்பர் 30, 2025 வரை 1.22 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் இத்திட்டத்தில், 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு அவர்களின் கடைசி 12 மாத சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்பட உள்ளது.
யுபிஎஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள் மீண்டும் ஒருமுறை என்பிஎஸ் (NPS) திட்டத்திற்கு மாற வாய்ப்பு வழங்கப்படும் என்று லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பவர்களுக்கு இந்த சலுகை கிடையாது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியமும், ஓய்வூதியதாரர் மறைவிற்குப் பிறகு குடும்பத்திற்கு 60% குடும்ப ஓய்வூதியமும் இத்திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.