ஐபிஎல் ஏலத்தில் வரலாற்று சாதனை படைத்த பத்திரனா
December 17, 2025

மதீஷா பத்திரனாவை 18 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதேபோல், இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டனை 13 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது.
திருமணத்திற்காக நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ள ஜோஷ் இங்கிலிஸை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8.6 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மேலும், வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை 9.2 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி தன்வசப்படுத்தியது.