மருத்துவமனை கழிவறையில் சிக்கிய பச்சிளம் குழந்தையின் சடலம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி
December 17, 2025

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் உள்ள பராசியா சிவில் மருத்துவமனையில் பெண் கழிவறை கோப்பையில் பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்புரவு பணியாளர் கழிவறையை சுத்தம் செய்யும்போது தண்ணீர் வெளியேறாததை கண்டு கவனித்தபோது, கோப்பையின் உள்ளே குழந்தையின் கையும் தலையும் சிக்கியிருப்பது தெரியவந்தது. இக்கோரமான காட்சியைக் கண்டு மருத்துவமனை ஊழியர்கள் உறைந்து போயினர்.
காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சுமார் ஏழு மணி நேரம் போராடி கழிவறை கோப்பையை உடைத்து குழந்தையின் சடலத்தை மீட்டனர். பி.எம்.ஓ டாக்டர் சுதா பக்ஷி இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இச்சம்பவத்திற்கு காரணமானவர்களைக் கண்டறிய மருத்துவமனை வளாகத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.