காதலியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

காதலியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

ஜாம்ஷெட்பூர் பொட்கா பகுதியில் பணியில் இருந்த பெண் காவலர் ஜோதிகா அவரது காதலன் கணேஷ் மாஞ்சியால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஜோதிகா திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாலும், வேலையை விடுமாறு கூறிய கணேஷின் பேச்சை கேட்காததாலும் இந்த பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணேஷ் பின்னர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். வேலையில்லாத கணேஷ், ஜோதிகாவின் வேலை சுதந்திரத்தை ஏற்க முடியாமல் இந்த விபரீத முடிவை எடுத்ததாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *